SRI SRINIVASA IN PORTLAND, AMERICA
SRI SRINIVASA's MARRIAGE IN PORTLAND, AMERICA






ஹில்ஸ்போரா : அமெரிக்காவின் ஒரிகன் பகுதியில் அமைந்துள்ள போர்ட்லாந்து பாலாஜி கோயிலில் மே 27ம் தேதி ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடைபெற்றது. அமெரிக்க இந்து கல்வி மற்றும் கலாச்சார சமூகமும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் இணைந்து இத்திருக்கல்யாண வைபவத்தை வெகு சிறப்பாக நடத்தினர். திருமலை கோயில் மாதிரியில் அமைக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட மேடையில் எழுந்தருளிய ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. சிறப்பு ஹோமங்களைத் தொடர்ந்து வேத மந்திரங்கள், மங்கல இசை முழங்க திவ்ய தம்பதியின் திருக்கல்யாண வைபவம் நடந்தேறியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண வைபத்தை முன்னிட்டு கர்நாடக இசைக் கச்சேரிகளும், வீணை இசைக் கச்சேரிகளும் நடைபெற்றது. இவ்விழாவிற்காக திருமலை திருப்பதியில் இருந்து பிரத்யேகமாக வேத விற்பனர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் திருமலையில் நடப்பது போன்று ஆகம விதிப்படி திருக்கல்யாண வைபவத்தை நடத்தினர்.விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் திருப்பதியில் வரவழைக்கப்பட்ட லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு, திருமண விருந்தும் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டது.
0 comments: