THIRUMURUGAN TEMPLE, TAWAU, SABAH, EAST MALAYSIA.
THIRUMURUGAN TEMPLE, TAWAU, SABAH, EAST MALAYSIA.









கிழக்கு மலேசியாவின் சபா மாவட்டத்தில் தவாவ் பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ திருமுருகன் ஆலயம். இக்கோயில் 1967ம் ஆண்டு கே.சத்யா என்பவரால் நிறுவப்பட்டதாகும். இக்கோயிலில் முருகப் பெருமாள் மூல ஸ்தானத்தில் காட்சி தருகிறார். இவர் தவிர விநாயகர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி,பார்வதி, சிவன், நவகிரகங்கள் உள்ளிட்ட பிற தெய்வங்களுக்கும் தனித்தனியே சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தைப்பூசம் 13 நாட்கள் திருவிழாவாக, தேர் பவனியுடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. செவ்வாய்கிழமை தோறும் மாலை 3 மணிக்கு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
0 comments: